இந்த வார முக்கிய நிகழ்வுகள்... முதன்மைச் செய்திகள்... | weekly news

2023-05-08 74

திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா கடந்த 6-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... மறக்க முடியாத குரல் இது. இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் முதல்வர் பொறுப்பில், தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்ல முழுமையாக அர்பணித்துக் கொண்டேன். மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா என என்னை நானே கேட்டுக்கொண்டபோது, என் மனதிற்கு தெம்பும் தைரியமும் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் தான்.

Videos similaires